Home இலங்கையாழில். 33 வருடங்களின் பின் புதுப் பொழிவு பெறவுள்ள ஆலயம்

யாழில். 33 வருடங்களின் பின் புதுப் பொழிவு பெறவுள்ள ஆலயம்

by admin

 

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறும்.

மறுநாள் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்று தொடர்ந்து அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும் , அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறி சென்ற நிலையில் , ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More