345
யாழ்ப்பாணம் – நயினாதீவில் முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. உலக மயக்க மருந்தியல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலை மயக்க மருந்தியல் பிரிவின் ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை மயக்க மருந்தியல் நிபுணர்களால் இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
நயினாதீவு பொது சந்தை பகுதியில் நடைபெற்ற பயிற்சியில் 40க்கும் அதிகமானோர் கலந்து முதலுதவி பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.
Spread the love