Home உலகம்காஸாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஐ.நாவில் தீர்மானம்

காஸாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஐ.நாவில் தீர்மானம்

by admin

 

காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

193 உறுப்பினர்களைக் கொண்ட  இந்த அமைப்பில்,  தீர்மானத்திற்கு ஆதரவாக  120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்துள்ளன. கனடா,  பிாித்தானியா , இத்தாலி, இந்தியா, ஜெர்மனி மற்றும் உக்ரைன் உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த தீர்மானத்தில், உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை  தடையின்றி  தொடர்ந்து   வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், பணயக்கைதிகள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதேவேளை   ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த  தீர்மானத்தை நிராகரிப்பதாக  இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More