307
யாழ்ப்பாணம் – வடமராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருட்டு நகைகளை விற்க உதவிய பெண் மற்றும் நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளத்துடன் 35 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள் ளன.
வடமராட்சி , வலிகாமம் பகுதிகளில் அண்மைய நாட்களாக வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரங்களில் வீடுகளினுள் புகுந்து திருடர்கள் திருடி வருவது தொடர்பிலான சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டன.
அது தொடர்பிலான முறைப்பாடுகளின் பி ரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவல்துறையினர் காங்கேசன்துறை வீமன் காமம் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய பெண் மற்றும் நகைகளை வாங்கியவர் என இருவர் கைது செய்யப்பட்டு உள்ளத்துடன் 35 பவுண் நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love