Home இலங்கையாழில். வெள்ளை வானில் வந்த கும்பல் வீடு புகுந்து கொள்ளை

யாழில். வெள்ளை வானில் வந்த கும்பல் வீடு புகுந்து கொள்ளை

by admin

 

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை நிற வானில் சென்ற கும்பல் ஒன்றும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்தவர்களின் அடையாள அட்டையை காண்பியுங்கள் என மிரட்டி அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்துள்ளனர்.
பின்னர் வீடு புகுந்து சோதனையிட்ட கும்பல் , வீட்டின் உரிமையாளர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த 5 இலட்ச ரூபாய் பணத்தினையும் , அதனுடன் இருந்த அரை பவுண் சங்கிலியையும் எடுத்து சென்றுள்ளனர்.
தம்மை அடையாளப்படுத்தாது , வீட்டினுள் திடீரென புகுந்து அடையாள அட்டைகளை பரிசோதித்து , வீட்டினையும் சோதனையிட்டு , பணத்தினை எடுத்து சென்றமை தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினரிடம், வீட்டிற்கு வந்தது காவல்துறையினரின் ஏதாவது பிரிவா என வினாவிய போது , அவ்வாறு யாரும் நேற்றையதினம் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து,  காவல்துறை நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More