Home இலங்கையாழில். காவற்துறையினரிடம் இருந்து தப்பிக்க மணலை கொட்டிய கடத்தல்காரர்கள்!

யாழில். காவற்துறையினரிடம் இருந்து தப்பிக்க மணலை கொட்டிய கடத்தல்காரர்கள்!

by admin

டிப்பரில் மணலை கடத்தியவர்கள் காவற்துறையினரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (06.11.23) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி செல்லப்பட்ட போது, வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் வாகனத்தை மறித்துள்ளனர்.

அதன் போது, மணலை கடத்தி சென்றவர்கள் வாகனத்துடன் தப்பித்தோடியதுடன் வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றனர்.

இதன் காரணமாக வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அதேவேளை வீதியில் கொட்டப்பட்ட மணலை வீதிக்கு அருகில் வசிக்கும் சில வீட்டார் மணலை தமது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மணலை கடத்தி சென்ற வாகனத்தை காவற்துறையினர் இனம் கண்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More