1.1K
விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவிற்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.
நேற்று திங்கட்கிழமை (06) புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love