Home இலங்கை100 இலங்கையா்கள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைப்பு

100 இலங்கையா்கள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைப்பு

by admin

 

விசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் தமக்கு சம்பளம் வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர் ‘  குறிப்பிட்டுள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More