329
தீபாவளி தினமான நேற்று (12.11.23) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொடிகாமம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட கெற்பேலி – கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து மதகுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற உசன் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
மேற்படி விபத்துச் சம்பவம் தொடர் பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love