பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்த்தால் கட்டங்கள் குலுங்கியதனால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு தம்பதியினா் பலியாகி உள்ளனர். எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டனொ தீவை மையமாக கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தொழிற்சாலைகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன் வணிக வளாகங்களின் மேற்கூரைகளும் இடிந்தது விழுந்துள்ளன
பல கட்டடங்களில் விரிசல்கள் விழுந்ததனால் பொதுமக்கள் தங்களின் வீடுகள், தொழிற்சாலை, வணிகவளாகங்களில் இருந்து வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் ஜெனரல் சாண்டோஸ் சிட்டி அருகே மரத்தொழிற்சாலை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு தம்பதி உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டள்ளமு.