அநுராதபுரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக, பரத நாட்டிய போட்டிகளில், 6 போட்டிகளில் முதலாம் இடத்தினையும், ஒரு போட்டியில் இரண்டாம் இடத்தினையும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் பெற்றுள்னர்.
பாரதிதாசன் பாடல் (தனி நடனம்), கவணாடல் (கிராமியம்) குழு நடனம் , போதை ஒழிப்பு(செந்நெறி) குழு நடனம் , வில்லிசை, தனி இசை ,வீணை வாசித்தல் (தனி) ஆகிய ஆறு போட்டிகளிலும் முதல் இடத்தினையும், கிராமியப் பாடல் (குழு இசை) போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
பயிற்றுவித்த ஆசிரியர்கள் (நடனம்) திருமதி.அனுஷாந்தி. சுகிர்தராஜ், திருமதி குமுதினி ஜெயரூபன், திருமதி.சுதர்சினி கரன்சன் ஆகியோருக்கும், இசை ஆசிரியர்கள் திருமதி. கனகாம்பரி சிவநேஸ்வரநாதன், திருமதி. தாட்சாயினி கணேசானந்தன், திருமதி. சோதிமாலா கௌரீசன், திருமதி சுகன்யா வசந்தன், திருமதி. தர்சினி சகாதேவன், வாத்தியக் கலைஞர்கள் திரு. ரஜீவன் , திரு துரைராஜா ஆசியர்களுக்கு பாடசாலை சமூகம் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.