இலங்கையிலிருந்து வெளிநாட்டினருக்கு குழந்தைகளை விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது,
இந்த பாரிய மனிதக் கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கையை முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனா்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட அறிக்கையை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனிதக் கடத்தல் தொடர்பில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பெண்ணான கே. பிரியங்கிகா சாமந்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது