302
முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பளை இத்தாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய குணாளன் மதுசா எனும் யுவதியே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இத்தாவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் படுகாயமடைந்த யுவதி பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love