யாழில் நிலத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் 34 கிலோ கேரளா கஞ்சாவை, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28.11.23) மீட்ட காவற்துறையினர், அதனை புதைத்து வைத்தார் எனும் சந்தேகத்தில் 24 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடற்கரையை அண்டிய பகுதியில் கஞ்சா புதைத்து வைத்திருப்பதாக மருதங்கேணி காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அதன் போது 3 பரல்களில் 17 பொதிகளாக கஞ்சா நிலத்தில் புதைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது