சீக்கிய பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்க குடிமகனைக் நியூயோர்க்கில் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
இது தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர் மீது புதன்கிழமை (நவம்பர் 29.11.23) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை இந்திய அரசாங்க ஊழியர் ஒருவர் இயக்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
இந்த விஷயத்தில், அவர்மீது கூலிக்குக் கொலை செய்ய முயன்றக்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
ஒருவருக்கு சுமார் 80 லட்சம் இந்திய ரூபாய் கொடுத்து சீக்கியரை கொலை செய்ய முயன்றதாக அவர்கள் கூறினர். ஆனால் அடியாள் என நினைத்து பணம் கொடுக்கப்பட்ட நபர் அமெரிக்காவின் ரகசிய ஏஜென்ட் எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், யாரைக் கொலை செய்ய இந்தத் திட்டம் தீட்டப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.