308
வட்டுக்கோட்டை காவற்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு செல்லும் வீதியில் காவற்துறையினர் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love