கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து , கிணற்றினை இறைத்த போது . கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர் , தாம் அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர்.
அதனால் அவரது காணிக்குள் இராணுவ அங்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.
இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.