சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு , புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச செயலர் கவிதா உதயகுமார், வட்டுக்கோட்டை பிரதேச வைத்திய அதிகாரி சி.செந்தூரன், ஓய்வுநிலை பெரதேனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் தி.ஆனந்தமூர்த்தி, வைத்தியர் தி.சுதர்மன், தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ந.இரவீந்திரன் சத்தியமனை நூலக ஸ்தாபகர் இ.சத்தியமலர் மற்றும் கிராம சேவகர்கள் ராஜ்கண்ணா, ந.சிவரூபன், பிரதீபா, திருமதி காஞ்சனா பரணீதரன்(பிசியோதெரபிஸ்ற், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை) ஆகியோர் கலந்து கொண்டு, விசேட தேவையுடையோர் மத்தியில் அவர்களை உற்சாகமூட்டும் வகையில் சிறப்பு உரையாற்றினார்கள்.
அதன் போது, பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவிகளின் இரண்டு நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அத்துடன் சங்கானையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியின் நடனமும் பண்ணாகம் வடக்கு அ.மி.த.க பாடசாலை மாற்றுத்திறனாளி மாணவியின் பாடலும் இடம்பெற்றது.
தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு, புலர் அறக்கட்டளையின் வெளிநாட்டு, உள்நாட்டு கருணை உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட நுளம்பு வலைகள், போர்வைகள், மழைக் கவசங்கள் (மாணவர்களுக்கு) என்பவை வழங்கி வைக்கப்பட்டது.