Home இலங்கைகைதான 06 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்

கைதான 06 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்

by admin

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 06 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது நேற்றைய தினம் புதன்கிழமை கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டதை அடுத்து , கடற்தொழிலாளர்களை  எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More