இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து (17.12.23) மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே , காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்ப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.