429
மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி, கலட்டி சந்தி மற்றும் முலவை சந்திப் பகுதியில் நடாத்திய தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 117 கால் போத்தல்களும் 9 முழு சாராயப் போத்தல்களும் காவல்துறை புலனாய்வாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.
மண்ணுக்குள் குழி வெட்டி அதற்குள் சாராயப் போத்தல்களை வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டவரும் இதன்போது கைது செய்யப்பட்டார்.நத்தார் பண்டிகை மற்றும் போயா தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love