Home இலங்கை  நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது.

  நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது.

by admin

மன்னார்  காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு (4) வலம்புரி சங்கு களுடன் நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு மன்னார் காவல்துறை  குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

-கைது செய்யப்பட்டவர் சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் எனவும் அவர் குறித்த நான்கு வலம்புரிச் சங்குகளையும் விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று   இரவு சாந்திபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதுடன்,அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரி சங்குகள்மன்னார்  காவல்துறை விசேட  பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட நான்கு வலம்புரி சங்கு களும் மன்னார் காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More