297
புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களாகிய தமக்கு புள்ளியிடல் முறைமையின் கீழ் அதிகஷ்ட பிரதேசங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாம் ஆசிரியர்களாக பல ஆண்டுகள் அதிகஷ்ட பிரதேசங்களில் சேவையாற்றி வந்துள்ளோம். தற்போது போட்டி பரீட்சையில் தோற்றி, அதிபர்களாக நியமனம் பெற்றுள்ளோம்.
அவ்வாறு நியமனம் பெற்ற எம்மை மீள அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு அதிபராக நியமித்துள்ளமையால், எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகஷ்ட பிரதேசத்தில் ஆசிரியர்களாக சேவையாற்றிய எம்மை மீள அதிகஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்க வேண்டாம் என கோரியுள்ளனர்
Spread the love