ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்காது, தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செய்துவரும் சூழ்நிலையிலேயே மொட்டு கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளை வளைத்துபோடுவதற்கான வியூகத்தை ஜனாதிபதி அமைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மலையகத்தில் உள்ள சிறு கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.