Home இலங்கைமாத்தறை – வெலிகமவில் துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி பலி!

மாத்தறை – வெலிகமவில் துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி பலி!

யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 1554 பேர் கைது!

by admin

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய காவற்துறை  சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வெலிகம – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை வெலிகம காவற்துறைனர் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 1554 பேர் கைது!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 1554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் பிடியாணை உத்தரவுக்கிணங்க 82 பேரிடம் விசாணைகள் மேற்கொள்ளவுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சட்ட விரோத சொத்து விவகாரம் தொடர்பில் 2 பேர் விசாரிக்கப்படவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More