510
யாழ் மாநகரசபையின் 75 ஆவது ஆண்டின் பவளவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் முன்றலில் யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடந்த 75 ஆண்டுகளில் யாழ் மாநகரசபையில் பணியாற்றிய 28 கெளரவ முதல்வர்கள் 17ஆணையாளர்களில் தற்போது வாழ்ந்து வரும், 04 மாநகரசபை முதல்வர்கள், 06ஆணையாளர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
மாநகர சபை முதல்வர்களாக தெரிவான செல்லன் கந்தயன், ப.யோகேஸ்வரி பற்குணராஜா, இமானுவேல் ஆர்னல்ட், மற்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்களுக்கும் , ஆணையாளராக கடமை புரிந்த சி.வி.கே.சிவஞானம், வே.பொ.பாலசிங்கம், மற்றும் பொ. வாகீசன் ஆகியோர் நினைவு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டனர்.
அதேவேளை மூன்று ஆணையாளர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் சமூகம் தரவில்லை தெரிவிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் யாழ் மாநகர சபை பிரதி ஆணையாளர் வே.ஆயகுலன், செயலாளர் த.தயாளன், பிரதமகணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா,உள்ளிட்ட மாநகரசபை பதவிநிலை அதிகாரிகள், சுகாதார பணியினர்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Spread the love