Home இலங்கைநோர்வேயில் தமிழ் பெண் சுட்டுக்கொலை:

நோர்வேயில் தமிழ் பெண் சுட்டுக்கொலை:

by admin

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.

அவரை மீட்ட காவற்துறையினர்  ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தப் பெண் பல் மருத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தப் பெண் பலமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், அது குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு தொடர்பில்  காவற்துறையினர்  உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வேயின் கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் (36 பேர்) கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வருடாந்த கொலை எண்ணிக்கை 30ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும். புத்தாண்டு தினத்திலிருந்து மேலும் ஆறு கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More