சந்திரனுக்கு விண்வௌி வீரர்களை மீள அனுப்பும் திட்டத்தை 2026 செப்டம்பர் வரை நாசா ஒத்திவைத்துள்ளது.
சந்திரனின் Lunar பகுதிக்கு அடுத்த ஆண்டு விண்வௌி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
சந்திரனின் Lunar பகுதிக்கு இறுதியாக 1972 ஆம் ஆண்டு விண்வௌி வீரர்கள் சென்று வெற்றிகரமாகத் திரும்பியிருந்தனர்.
Artemis III எனும் இந்த திட்டத்தில் மேலும் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்படுத்தப்பட்டதாக நாசா கூறியுள்ளது.
எவ்வாறாயினும் விண்வௌி வீரர்கள் பயணிப்பதற்கான விண்வௌி ஓடமோ, அவர்கள் அணிவதற்கான விண்வௌி ஆடைகளோ இதுவரை தயார்ப்படுத்தப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.