501
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.
யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் ” விசேட காரணத்தினால் காலை 10. 30 மணிக்கு பூட்டப்பட்டு , பிற்பகல் 2 மணிக்கு மீள திறக்கப்படும்” என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்கு இன்றைய தினம் சென்றிருந்தமையால் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நூலகம் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும் , அறிவித்தலில் ” விசேட காரணம்” என குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love