Home உலகம்இந்தோனேசிய சுமத்ரா தீவின் மராபி மலை, மீண்டும் வெடித்து!

இந்தோனேசிய சுமத்ரா தீவின் மராபி மலை, மீண்டும் வெடித்து!

by admin

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பிலிருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 6.21 மணிக்கு எரிமலை வெடித்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடதக்கது.

சுமத்ரா தீவின் மிகவும் செயற்பாட்டிலான எரிமலை மட்டுமன்றி, இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் விழித்திருக்கும் 130 எரிமலைகளில் ஒன்று என்ற வகையிலும் மராபி கவனம் பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More