344
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண காவல்நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் பல்வேறு நபர்களிடமும் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது தனிப்பட்ட வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பண பரிமாற்றங்களும் இடம்பெற்றுள் ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love