347
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் நேற்று மாலை அப்பகுதி மக்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்த எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் இணைந்து கேக் வெட்டி எம்.ஜி.ஆரினுடைய பிறந்த தினத்தை கொண்டாடினார்கள்.
இதன்போது எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன் வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன
Spread the love