Home உலகம்சுப்ரமணியம் ஈஸ்வரன் பதவிவிலகினாா்

சுப்ரமணியம் ஈஸ்வரன் பதவிவிலகினாா்

by admin

 

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று  பதவிவிலகியுள்ளாா்.   இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அவா் அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக   பதவி வகித்திருந்த நிலையிலேயே அவா் மீது   இவ்வாறு  ஊழல் குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டுள்ளன.  எனினும், தன் மீதான  குற்றச்சாட்டுக்களை  அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன்   மறுத்துள்ளாா்.

ஊழல், மோசடிகளற்ற ஆட்சி நடைபெற்று  வரும் நாடாக சிங்கப்பூர் கருதப்படுகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக   தொிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More