அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை பாராட்டுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் தலைவர்கள் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது உதவும் எனவும் வலியுறுத்தப்பட்டது.