கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.