இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்ப் பதவிக்கு போட்டியிடுகின்றனர். .
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன இன்று திருகோணமலையில் கூடியுள்ளது.
அதன்படி பொதுக்குழுவில் இருந்து 325 பேரும், மத்திய செயற்குழுவில் இருந்து 50 பேரும் இணைந்து இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.