Home இலங்கை அதீத போதைப்பொருள் பாவனையால், யாழில் இளைஞன் உயிரிழப்பு!

அதீத போதைப்பொருள் பாவனையால், யாழில் இளைஞன் உயிரிழப்பு!

by admin

அதீத போதைப்பொருள் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை (24.01.24) சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பொலிசாரின் விசேட நடவடிக்கைக்கான “யுக்திய” நடவடிக்கை யாழ்ப்பாணத்திலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலையே போதைப்பொருள் பாவனையால் குறித்த இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More