Home இலங்கை10 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

10 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

by admin

இலங்கையின் எந்தேரமுல்லை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அப்புகேவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் ஒரு தொகை ப்ரீகெப் (PREGAB) போதை மாத்திரைகளுடன் நபரொருவர் காவற்துறை  விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 192,000 ப்ரீகெப் (PREGAB) 150 mg ரக போதைப் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக எந்தேரமுல்ல காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையழினர்  தெரிவித்தனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More