இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு, ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், இன்று காலி முகத்திடலில் நடைபெற்றது.
நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் தமிழ்மொழியில் இசைக்கப்பட்டது.
தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை மற்றும் இசைக்கப்படாமை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறான விமர்சனங்கள் தொடர்ந்தன. நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழில் இசைக்கப்பட்ட தேசியகீதம், கோட்டாபயவின் ஆட்சியில் மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.