சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியில் இருந்து இன்று (செவ்வாய்கிழமை – 06.02.24) ) விலகி உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்த 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு
எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினமே வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சொகுசுவாழ்வு வாழ்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது