Home இலங்கை வன்முறையற்ற வாழ்தலுக்காய் எழுச்சி கொள்வோம்! ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்.

வன்முறையற்ற வாழ்தலுக்காய் எழுச்சி கொள்வோம்! ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்.

One Billion Rising -2024

by admin

 

“நூறுகோடி மக்களின் எழுச்சி” எனும் உலகளாவிய பிரச்சாரமானது ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ் எழுச்சியானது வன்முறைகள் இல்லாத வாழ்தல் கொண்டாடப்பட வேண்டியது – பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது.

இவ்வுலகில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்க்கைக் காலத்தில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். 2012 ஆம் ஆண்டின் உலக சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 700 கோடியாக இருந்துள்ளது. அந்தவகையில் கிட்டத்தட்ட பாதித்தொகையினராகிய மூன்று கோடிப் பெண்களில் நூறுகோடிப் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இதனை ஆய்வு செய்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணிலைவாதியான Eve Ensiler என்பவரால் 2012 இல் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் 100 கோடி மக்களின் எழுச்சி முன்மொழியப்பட்டு 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஒரு உலகந்தழுவிய பிரச்சாரமாக இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக எழுச்சிகொள்வோம்> ஆடுவோம்> பாடுவோம்> கலைகளினூடாக மகிழ்வான வாழ்தலை உருவாக்குவோம் என்கின்ற அடிப்படையில் வருடா வருடம் இப்பிரச்சாரக் கொண்டாட்டமானது நடைபெற்றுவருகிறது.  இலங்கையிலும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இவ் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பெண்களுக்கும்> சிறுவர்களுக்கும்> பால்-பால்நிலை பல்வகைமையினருக்கும்> பூமிக்கும்> இயற்கைக்கும் வன்முறை செய்யாத வாழ்தலைக் கொண்டாடுவோம் எனும் அடிப்படையில் இலங்கையில் பல்வேறு பாகங்களில்; நூறுகோடி மக்களின் எழுச்சியினை வன்முறைகளற்ற வாழ்தலைக் கட்டியெழுப்பும் பெண்ணிலைவாதிகள்> சமூகமாற்றச் செயற்பாட்;டாளர்கள்> படைப்பாளிகள் போன்றோர் முன்னெடுத்து வருகின்றனர்.

“பெண்கள் – பூமி – சிறுவர்கள் – பால் பால்நிலை பல்வகைமையினர் முதலியோருக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வாழ்தல் அழகானது> ஆரோக்கியமானது”> “அன்பினாலோர் உலகம் செய்வோம்” எனும் தொனிப்பொருள்களில் பெண்கள் இணைந்து இசைக்கும் நீதிக்கான பறை> வன்முறையற்ற வாழ்தலுக்கான ஓவியக் கண்காட்சிகள்> ஊர்வலங்கள்> வீதி நாடகங்கள் எனப் பல்வேறு கலைசார் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல கொரோனா தொற்றுக் காலத்திலும்> பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் பெண்களுக்கு ஏற்பட்டிருந்த அதிகப்படியான வீட்டு வன்முறைகளுக்கு எதிராக இந்நூறு கோடி மக்களின் எழுச்சி நாளில் பல செயற்பாடுகள் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்நெருக்கடி காலங்களில் உள்@ர் விவசாயம் சார் அறிவினைத் தேடிப்பெற்று அதனை தங்கள் தங்கள் வீடுகளில் உற்பத்தி செய்தலும்> நண்பர்களுக்கு பகிர்தலும் எனும் செயற்பாடும் நடைபெற்றது.

2013 ஆம் ஆண்டு முதல் இவ்வெழுச்சியானது நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு தொனிப்பொருளில் நடைபெற்று வந்திருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழுவினாலும்> மூன்றாவது கண் உள்@ர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினராலும்> வன்முறையற்ற வாழவுக்கான ஓவியர் குழுவினராலும்> ஏனைய மாவட்டங்களில் உள்ள பெண்கள் அமைப்புகளாலும் வருடாவருடம் விடுதலைக்காய்> வன்முறைகளற்ற வாழ்தலுக்காய் எழுச்சிகொள்வோம்! என்ற தொனிப்பொளில் பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஆணாதிக்கச் சிந்தனைகளால் உருவாக்கப்பட்டுள்ள முதலாளித்துவம்> வணிகமயமாக்கல் சிந்தனைகள்> பன்மைத்துவச்; சிந்தனைகளற்ற பாடசாலைக் கல்விமுறைகள்> பரீட்சை மையக் கற்றல்கள்> வறுமை> ஒடுக்குமுறை> சுரண்டல்கள்;> பிரிவினைகள்> கட்டுப்படுத்தல்கள்> பேராசை> தனிமனித வாழ்தல்> பல்தேசியக் கம்பனிகளின் அதிகாரங்கள்> பிறரில் தங்கிவாழ்தல் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற்று எங்கள் அறிவிலும் திறனிலும் பெருமைகொண்டு நாங்கள் எங்கள் வாழ்தலுக்காக எழுச்சிகொள்வோம்!> விடுதலைக்காய் எழுச்சி கொள்வோம்!> ஆடுவோம்> பாடுவோம்> கொண்டாடுவோம்! என்று இவ்வருடமும் இந் நூறு கோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்படுகின்றது.

இவ்வருடமும் மாசி மாதம் பதின்நான்காம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் நூறுகோடி மக்;களின் எழுச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்> 31.12.2023 அன்று பிறக்கவிருந்த 2024 ஆம் ஆண்டு வன்முறையற்ற ஆண்டாக அமைய மட்டக்களப்பு நகரில் (தான்டவன்வெளி – காந்திப்பூங்கா)  உள்ள மக்களுக்கு பூக்கள் கொடுத்து புதுவருட வாழ்த்துகளை தெரிவித்ததோடு நியாயநடையிலும் கலந்துகொண்டு இவ்வருடத்திற்கான நூறு கோடி மக்களின் எழுச்சிக்கான ஆரம்ப நிகழ்வினை சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு> மூன்றாவது கண் உள்@;ர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழு ஆகியோர் இணைந்து நடாத்தியிருந்தனர்.

தொடர்ந்து இக்குழுவினரால் 14.02.2024 அன்று மட்டக்களப்பு தாளங்குடாவில் அமைந்துள்ள கல்வியியற் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து செயல்வாதப் பாடல்கள் பாடி வன்முறையற்ற வாழ்தலுக்கான நூறு கோடி மக்களின் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டதோடு> முனைக்காடு கிராமத்தில் உள்ள மக்களுடன் வன்முறையற்ற வாழ்தலுக்கான ஓவியர் குழுவினரின் ஓவியக் கலைச் செயற்பாடும் மூன்றாவது கண் நண்பர்கள் குழுவினரின் செயல்வாதப் பாடல்கள் நிகழ்த்துகையும் கலந்துரையாடலும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 18.02.2024 ஆம் திகதி நாவற்குடா கிராமத்தில் “உள்@ர் வளங்களில் தங்கிவாழும் சமூகம் எப்போதும் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவல்லதாக அமைகின்றது” என்கின்ற தொனிப்பொருளில் அவ்வூர் முதுசங்களின் அனுபவப்பகிர்வுகளுடன் வன்முறையற்ற வாழ்தலுக்கான செயல்வாதப் பாடல்கள் நிகழ்த்துகையும்> சிறுவர்களின் வில்லுப்பாட்டும் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

27.02.2024 ஆம் திகதி புத்தளத்தில் பொது மைதானமொன்றில் இலங்கையில் பல மாவட்டங்களிலும் உள்ள பெண்கள்; அமைப்புகளான யாழ்;ப்பாணம் வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம்> மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம்> அடம்பன் ஆற்றல் நுண்கலைக் கல்லூரி> முல்லைத்தீவு முள்ளிமோட்டை ஆளுமையாள் பெண்கள் குழு> மற்றும் களிமோட்டை ஆளுமை பெண்கள் வலையமைப்பு> ஹற்றன் சமூக நலன்புரி மன்றம்> அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கு> புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையம்> மட்டக்களப்பு சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு> வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்குழு மற்றும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்> அநுராதபுரம் சாவிஸ்திரி கிராம மட்ட பெண்களுக்கான வலையமைப்பு போன்ற பெண்கள்; அமைப்புகள் இணைந்து “விடுதலைக்காய் எழுவோம்! தங்கி வாழ்தலை தவிர்ப்போம் அல்லது குறைப்போம்! எங்கள் இணைதலே எங்கள் பலம்! வன்முறையற்ற வாழ்தலுக்காக எழுச்சிகொள்வோம்!” எனும் தொனிப்பொருள்களில் நூறுகோடி மக்களின் எழுச்சியை ஆடிப்பாடிக் கொண்டாடவுள்ளனர்.

சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More