ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவது போல் தந்திரமானவர் அல்ல என்று கூறிய தேசிய மக்கள் சக்தி (NPP தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, எந்த வகையிலும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட நினைத்தால் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே, அவர் வீட்டிற்குச் செல்ல நேரிடும் என இன்று (19.02.24) தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற புதிய விவாதம் எழுந்துள்ளதாகவும், அது காலங்காலமான கோஷம் எனவும் தெரிவித்தார்.
ரணில் தந்திரமானவர் என்று சிலர் சொல்கிறார்கள். அவர் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தில் ஜனாதிபதியானார். ஜனாதிபதி தேர்தலிலும் தப்பிக்க ஏதாவது செய்வார். ரணில் கூறுவது போல் தந்திரமானவர் அல்ல. அதற்கு முன்னரே அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.
ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கையை சஜித் பிரேமதாச நிராகரித்ததால் தான் ரணில் ஜனாதிபதியாக முந்தது. இல்லையெனில் ரணில் இப்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். பின்னர் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக பதவியேற்க முனைந்தார்.பொன்சேகா முடிவெடுப்பதற்கு மூன்று நாட்கள் தேவை எனக் கூறப்பட்டது. மூன்று நாட்கள் தாமதிக்க கோட்டாபய தயாராக இருக்கவில்லை.மூன்றாவது தெரிவாக ரணிலிடம் கோரிக்கை விடுத்தார்.தனக்கு நஷ்டம் ஏதும் இல்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டார் என திசாநாயக்க கூறினார்.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற மாவீரர் அல்ல எனவும், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட ரணிலை சிறைபிடிப்பதாக வாக்குறுதியளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியானதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் பெண்கள் தீர்க்கமான காரணியாக இருப்பார்கள் எனத் தெரிவித்த அவர், இலங்கையில் 56 சதவீத வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர் என்றார்.