Home இலங்கைமத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவி உட்பட   4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்  

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவி உட்பட   4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்  

by admin
 
மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில்  மௌலவி உட்பட   4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்   வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு  வியாழக்கிழமை(29)   கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட  சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும்  மன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவத்தில் கைதான மௌலவி உட்பட ஏனைய  கைது செய்யப்பட்ட   30 ,26, 22, 23 ,வயது மதிக்கத்தக்க  4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில்   முன்னிலைப்படுத்தப்பட் போது எதிர்வரும் மார்ச் மாதம்  5 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட  குறித்த வழக்கில்   பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி  உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான்    நீண்ட சமரப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில்  மௌலவி உட்பட   4 சந்தேக நபர்களை   எதிர்வரும்  மார்ச் மாதம் 05 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்  உத்தரவிட்டிருந்தாா்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்    மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே  தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More