439
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர்.
இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லேரியா, உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அழகு நிலையம் ஒன்றின் முகாமையாளரான ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி (வயது 27) தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க பெர்னாண்டோ (வயது 22) இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Spread the love