ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கருத்துக்கள் தொடர்பில் வேறு அறிக்கையை வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) தாம் வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் அறிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (03.04.24) தனது சட்ட ஆலோசகர் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட மனுவின் ஊடாக அவர் இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் வாக்குமூலம் தொடர்பில் நாளை ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் கடந்த மார்ச் 28 ஆம் திகதி அவருக்கு உத்தரவிட்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, மார்ச் 25 அன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு மைத்திரிபால சிறிசேனவிடம் ஐந்து மணி நேர வாக்குமூலத்தைப் பெற்றது.
உயரித்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கு காரணமான பிரதான சூத்திரதாரி யாரென தமக்கு தெரியும் என மைத்திரிபால கூறியிருந்த பின்புலத்திலேயே அவர் அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவின் பிரகாரம் சிஐடிக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.