Home இலங்கைமுருகன், ரொபர்ட் பயஸ்,  ஜெயக்குமார் – கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்!

முருகன், ரொபர்ட் பயஸ்,  ஜெயக்குமார் – கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்!

by admin

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ்,  ஜெயக்குமார் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இன்று காலை சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணைகளின் பின் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த மூவரும் சட்ட விரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியா சென்றமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் குறித்த மூவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவரவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். எனினும் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் இன்றி அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More