Home இலங்கைசுவிஸில் இருந்து யாழ் திரும்பியவர், குளியறையில் இருந்து சடலமாக மீட்பு!

சுவிஸில் இருந்து யாழ் திரும்பியவர், குளியறையில் இருந்து சடலமாக மீட்பு!

by admin

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றவர் குளியறையில் உயிரிழந்துள்ளார்.

நவாலி தெற்கை சேர்ந்த உதயகுமார் எனும் 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சுவிஸ் நாட்டில் வசித்து வரும் குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக கடந்த திங்கட்கிழமை இலங்கை திரும்பி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (09.04.24)  வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் , வீட்டார் சந்தேகம் அடைந்து குளியலறை கதவினை உடைத்து உள்ளே சென்ற போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More