Home இலங்கைஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – புதிய தகவல்கள் வெளியானது!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – புதிய தகவல்கள் வெளியானது!

இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் - ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்டுள்ளார்!

by admin

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னாள் காவற்துறை அதிகாரியொருவர் You Tub  சனலுக்கு வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை மேற்கோள்காட்டி அவர் இவற்றை கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களைப் பெற்றுக கொடுப்பதற்காக, கத்தோலிக்க பத்திரிகையான “ஞானார்த்த பிரதீபய”வின் தலைமை ஆசிரியர் சிறில் காமினி நேற்று (19.04.24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.

அங்கு சிறில் காமினி கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்து விட்டு சென்றார்.

அதன் படி, இது தொடர்பான 8 விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று ஊடகவியலாளர் சந்திப்பு அழைப்பு விடுத்திருந்தார்.

“முதலாவது… 2018 நவம்பர் 30 ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு காவற்துறை  அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் அது தொடர்பான விடயங்கள்.”

“இரண்டாவது… சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த IP முகவரியை யார் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி.”

“மூன்றாவது… வவுணதீவு சம்பவத்தை தவறாக சித்தரித்த சம்பவம்.”

“நான்காவதாக… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் கைப்பேசிக்கு வந்த அழைப்பு.”

“ஐந்தாவது… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் யார்?” என்றகேளிவிகளையும் விபரங்களையும் கூறியுள்ளார்.

ஆறாவது விடயம்,கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியை அழைத்து வருமாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, அசாத் மௌலானாவிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஏழாவது,2018 ஆம் ஆண்டு புத்தளத்தில் சுரேஷ் சலேவிற்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எட்டாவது விடயமாக,உயிரத்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அபுஹிந்த் என்ற நபர் தொடர்பில்  கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More