Home இலங்கைஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி!

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி!

by admin

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21.04.24)  இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன பங்கேற்றது.

ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடாத்தப்பட்டது.

இந் நடைபவனி யாழ் போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பித்து பண்ணை வீதி வழியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலையை அடைந்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More