290
யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21.04.24) இடம்பெற்றன.
கடந்த 2029 ஏப்ரல் 21 அன்று தேவ ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், தேவாலய பிரதான மணி ஒலிக்கப்பட்டு கூட்டுத் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். அதனை தொடர்ந்து, உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும் முகமாக மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டன.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவினர் கலந்துகொண்டனர்.
Spread the love